News May 2, 2024
புதுவை: நடுரோட்டில் நிர்வாணம் – பரபரப்பு

புதுச்சேரி காந்தி வீதியில் நேற்று மாலை 5:00 மணிக்கு, 45 வயது மதிக்க தக்க நபர், உடலில் ஒட்டு துணி இன்றி நிர்வாணமாக நடந்து சென்றார். தொடர்ந்து அஜந்தா சிக்னல் நோக்கி வேகமாக ஓடியவர் திடீரென நேரு வீதி நோக்கி வேகமாக நடந்தார். சாலையில் சென்ற பெண்கள் அவரை கண்டு முகம் சுளித்தனர். தகவலறிந்து வந்த பெரியக்கடை போலீசார் அவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
புதுவை: மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் சோதனை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருந்தகத்தில் 6 பேர் கொண்ட புதுச்சேரி மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் பொதுமக்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

புதுவை: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…