News October 18, 2025
புதுவை: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
புதுவை: மாணவர்களுக்கு நிதி உதவி அரசாணை வெளியீடு

புதுச்சேரி, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுமார் ₹ 27.84 கோடி நிதியுதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10% அரசு இட ஒதுக்கீட்டில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், இந்த நிதியுதவி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
News November 12, 2025
புதுச்சேரி: முதலாம் உலகப் போரின் நினைவு தினம்!

முதலாம் உலக போரின் 109ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (12.11.2025) காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நினைவு தூண் முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் தியரி மாத்தூ, புதுவைக்கான துணை தூதர் எட்டியென் ரோலண்ட் பியக், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் தூதரக அதிகாரிகள், பிரஞ்சு குடியிரிமை மக்கள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.


