News November 4, 2025
புதுவை: ஜிப்மர் மருத்துவமனை இயங்காது

புதுவை ஜிப்மர் நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் விடுமுறை தினமான குருநானக் ஜெயந்தி முன்னிட்டு, நாளை 5ம் தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே வெளிப்புற சிகிச்சைக்கு வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். மற்றபடி அவசர சிகிச்சை பிரிவு அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், போலியான வர்த்தக செயலிகளிலும் Fake Share Market App இணையவழி மோசடிக்காரர்கள் உருவாக்கிய செயலிகளிலும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் வர்த்தகத்தில் அது பற்றிய புரிதல் இல்லாமல், எந்த கணக்குகளிலும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் Whatsapp, facebook ,instagram போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
News November 14, 2025
புதுச்சேரி: வாக்காளா் படிவங்களைப் பெறலாம்

புதுச்சேரி வாக்காளா் பதிவு அதிகாரி அா்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர சீா்திருத்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில், அதாவது இம்மாதம் 15,16 ஆகிய தேதிகளில் தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜ் நகா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அந்தந்த வாக்குச்சாவடியில் இருப்பாா்கள். வாக்காளர்கள் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
News November 14, 2025
புதுவை: இஸ்ரோவில் வேலை-இன்றே கடைசி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


