News October 12, 2025
புதுவை: ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 16, 2025
புதுச்சேரி: 5 தீயணைப்பு வாகனங்கள் வழங்கிய முதல்வர்

புதுச்சேரி தீயணைப்புத் துறைக்கு 3.84 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து சிறிய ரக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு நீர் உந்து வாகனம் புதுச்சேரி முதல்வரால், தீயணைப்புத் துறைக்கு வழங்கப்பட்டு இன்று பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில் தீயணைப்பு துறையின் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வாகனங்கள் புதுச்சேரி காரைக்கால் மாகி ஆகிய பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்று அரசு தகவல் தெரிவித்தது.
News December 16, 2025
புதுச்சேரி: சாலை விபத்தில் கர்ப்பிணி பெண்

மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி நிவேதா, பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் பகுதியில் பைக் பள்ளத்தில் இறங்கியதால் நிவேதா கீழே விழுந்து வயிற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.


