News September 30, 2025

புதுவை: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமீப நாட்களில் கேரளா லாட்டரி என்ற பெயரில் வாட்ஸ்-அப், முகநூல் மூலம் புதிய மோசடி நடக்கிறது. அதாவது சமூக வலைதளத்தில் கேரள லாட்டரியை விற்பனை செய்து, அதற்கு ரூ.8 லட்சம், ரூ.16 லட்சம் பரிசு விழுந்தாகவும், அதற்கு வரி செலுத்த முன்பணம் அனுப்பி வைக்குமாறும், வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு மோசடி நடக்கிறது. எனவே பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 9, 2025

புதுச்சேரி வரும் ரயில்கள் ரத்து

image

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல அதிகாரி வினோத் குமாா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச.15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி – விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி – எழும்பூா் பயணிகள் ரயில், டிசம்பர் 15ல் புதுச்சேரி விழுப்புரத்துக்கு இடையில் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.

News December 9, 2025

புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

புதுவை: விஜய் பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்

image

புதுச்சேரியில், இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் பேசியத்தற்கு, அமைச்சர் நமச்சிவாயம் எதிர்வினை ஆற்றியுள்ளார், ரேசன் கடைகள் மத்திய அரசு Controlல் இருக்கிறதா?, இல்லை மாநில அரசு Controlல் இருக்கிறதா?, இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் ரேசன் கடைகள் மூலம் தான் விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத்தெரியாம பேசிட்டு இருக்கார் விஜய் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியுள்ளார்.

error: Content is protected !!