News September 30, 2025
புதுவை: சென்டாக் நிதி விரைவில் கிடைக்கும்

புதுவை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய விளையாட்டு தின விழா மற்றும் கேலோ புதுவை திருவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி கருவடிக்குப்பத்தில் நேற்று (செப்.29) நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “மாணவர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் காமராஜர் கல்வி உதவித் தொகைக்கான நிதி (சென்டாக் நிதி) ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விரைவில் கிடைக்கும்.” என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
புதுவை: மானிய விலையில் வான்கோழிகள்

கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளில் வான்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 6 வார வான்கோழிகள் 50 சதவீத மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. கால்நடை மருந்துவமனையை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 12, 2025
காரைக்காலில்: காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் அனைத்து பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் கலந்தாய்வு கூட்டம், நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் கடைபிடிக்கவேண்டிய சாலை விதிகளை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு பற்றியும், விபத்து நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர்.
News December 12, 2025
புதுவை: மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் சோதனை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருந்தகத்தில் 6 பேர் கொண்ட புதுச்சேரி மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் பொதுமக்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.


