News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News January 20, 2026
புதுகை: இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து அறிவிப்பு!

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தீவிர வாக்காளர் பட்டியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
புதுவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

புதுவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 20, 2026
புதுவை: நகை தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

புதுவை, சாரம் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி சுந்தரமூர்த்தி (63). இவர் நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்றபோது திடீரென தவறி விழுந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


