News August 20, 2024
புதுவை காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் குமார் தலைமையில் கலந்து கொண்டு காலாப்பட்டு சொலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் தீ விபத்து சிறுவர் மரணம், குடியிருப்பு மக்கள் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Similar News
News January 24, 2026
புதுவை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் & வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. அதன்படி, ரெட்டியாா்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
News January 24, 2026
புதுவை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

புதுவை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும்.
News January 24, 2026
திருப்பதி – புதுச்சேரி இடையேயான ரயில் நேரம் மாற்றம்

திருப்பதி – புதுச்சேரி இடையே இயக்கப்படும் தினசரி மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 16111) கால அட்டவணையில் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேர மாற்றம் வரும் குடியரசு தினமான ஜன.26 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய நிலையங்களில் ரயில் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


