News October 12, 2025

புதுவை: காரில் மதுபானம் கடத்தியவர் கைது

image

புதுவை அடுத்த பட்டானூர் சோதனைச் சாவடியில் கோட்டக்குப்பம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் 40 மதுபாட்டில்கள் இருந்தன. இது தொடர்பாக காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர், சென்னை செனாய் நகர் சந்திரசேகர் என தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 8, 2025

புதுச்சேரி: ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. மாதச்சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6.கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 8, 2025

புதுவை: காதலி இறந்த சோகத்தில் தற்கொலை

image

புதுவை தவளக்குப்பம் அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் ஜெயகாந்த், டிரைவர். இவர் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அப்பெண் குடும்ப பிரச்சனையில் இறந்தார். இதையடுத்து அதிலிருந்து, ஜெயகாந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடமும் நண்பர்களிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 8, 2025

புதுச்சேரி: பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

image

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்வில், முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரவேற்றனர்.

error: Content is protected !!