News April 11, 2024

புதுவை காங்கிரஸ் தலைவர் ரம்ஜான் வாழ்த்து 

image

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம்  ரம்ஜான் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள். இஸ்லாத்தில் ஐந்து ஒழுக்க நெறிகளில் ஒன்றாக நோன்பு உள்ளது. ரம்ஜான் மாத காலத்தில் பிறரை மன்னித்தல், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள நபிகள் நாயகம் வலியுறுத்தினார். இதனால் ரம்ஜான் மாதத்தில் உடல் தூய்மையுடன் உள்ள தூய்மையும் பெறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 12, 2025

புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.

News November 12, 2025

புதுச்சேரி: கார் மோதி தொழிலாளி படுகாயம்

image

காரைக்கால் அகலங்கன்னு கிராமம் சிவக்குமார், இவர் விவசாய தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டிபன் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் விழிதியூர் சென்றார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2025

புதுச்சேரி: நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி கட்டிட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2024-25ம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவி மற்றும் பண பயன் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களுடன் அந்தந்த பிராந்திய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!