News November 15, 2025
புதுவை: இலவச நண்டு வளர்ப்பு பயிற்சி

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 21-ம் தேதி அன்று காரைக்காலில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு முறை நீர் மேலாண்மை பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க 8778608187 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
புதுச்சேரி: ரகளையில் ஈடுபட்டவர் கைது

புதுச்சேரி, ஒதியஞ்சாலை நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாசாலை மதுபான கடை அருகே, நபர் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு கிடைத்தது. தகவல் சம்பவ இடத்துக்கு போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்ததில், அவர் முதலியார்பேட்டையை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.
News December 15, 2025
புதுச்சேரி: குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீர்மானம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில், தட்டாஞ்சாவடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் புதுவையில் செயல்பட்டு வந்த போலி மருத்துவ தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின், உயிரோடு விளையாடிய மருந்து நிறுவன உரிமையாளர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
News December 15, 2025
புதுச்சேரி: ரூ.52 லட்சம் இழந்த பெண்

புதுச்சேரி வைத்திகுப்பத்தை சேர்ந்த பெண்ணை, டில்லி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என கூறி மர்ம நபர் ஏமாற்றி உள்ளார். அவர் அந்த பெண்ணின் பெயரில் சட்டவிரோத பணமோசடி நடந்ததாக கூறி, பின்னர் டில்லி போலீஸ் அதிகாரி என அறிமுகமான மற்றொரு நபர் வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கேட்டு ஏமாற்றியுள்ளார். அப்பெண் மொத்தம் ரூ.52 லட்சம் அனுப்பி ஏமாந்துள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


