News March 27, 2024
புதுவை அருகே காவல்நிலையம் முற்றுகை

உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Similar News
News January 20, 2026
புதுச்சேரி: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்!

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று, இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை பெறலாம். இங்குள்ள விநாயகரின் அருள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 20, 2026
3 மாத்திரைக்கு தடை விதித்த புதுவை அரசு

புதுச்சேரியில், 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில், அவற்றை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. புதுவை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் அனந்தகிருஷ்ணன், இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். மேலும் மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News January 20, 2026
இந்திய தூதருக்கு புதுவை முதல்வா் கடிதம்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதியைச் சோ்ந்த, கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி, ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு, புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா். விரைவில் ஈரானில் அவரை கண்டறிந்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வா் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.


