News August 22, 2025
புதுவை: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், புதுச்சேரியில் காலியாக உள்ள ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
Similar News
News January 20, 2026
புதுவை: நகை தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

புதுவை, சாரம் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி சுந்தரமூர்த்தி (63). இவர் நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்றபோது திடீரென தவறி விழுந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 20, 2026
புதுவை: சீனியர் எஸ்.பி-க்களுக்கு பறந்த உத்தரவு

சீனியர் எஸ்.பி லட்சுமி சவுஜன்யா, நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் 16 சீனியர் எஸ்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுவையில் உள்ள மொத்த காவல் நிலையங்களிலும் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த ஆய்வறிக்கையை 6 பிரதிகளாக தயார் செய்ய வேண்டும். பிப்.15-க்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று காவல்துறை தலைமையக சீனியர் எஸ்.பி அனில்குமார் லால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News January 20, 2026
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவையில் இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டமங்கலம் கோட்டம், திருச்சிற்றம்பலம் துணை மின் நிலைய உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். இதனால் திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இவ்வாராக மின் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


