News March 26, 2024
புதுவையில் 2 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ரவுடிகளை ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்து வருகின்றனர். அதன்படி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்த ஜான்சன், குணசேகர் ஆகிய 2 பேர் ஊருக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு முத்தியால் பேட்டை போலீசார் தேர்தல் அதிகாரி குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
காரைக்காலில் குறைதீர்ப்பு முகாம் அறிவிப்பு!

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலர் பொன் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 17.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆட்சியர் வளாகத்தில் காலை 09:30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
புதுவை: டெல்லி குண்டுவெடிப்புக்கு முதல்வர் இரங்கல்

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.
News November 11, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: புதுச்சேரி முதல்வர் இரங்கல்