News May 15, 2024

புதுவையில் மாநில தடகளப் போட்டி

image

புதுவை மாநில விளையாட்டுத் துறை & இளைஞா் நல இயக்குநரகம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில தடகளப் போட்டி புதுவை கோரிமேடு ஆயுதப் படையில் நேற்று காலை தொடங்கியது. இன்று (மே.15) 200 மீட்டா்,600 மீ. ஓட்டம், 100 மீ. தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெறுகிறது.

Similar News

News December 10, 2025

அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

image

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “புதுச்சேரி அரசில் பணியாற்றி வரும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியர்களின் 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வரும் 1-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் http://esalary.py.gov.in/ipr என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது.

News December 10, 2025

புதுவை கல்வித்துறையின் பணி மூப்பு பட்டியல் வெளியீடு

image

புதுவை கல்வித்துறையில் பணியாற்றி வரும் துணை முதல்வர்கள், ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியல், பதவி உயர்வுக்காக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2025 (இந்த ஆண்டு) வரை துணை முதல்வராக பணியில் சேர்ந்த 82 பேரின் பணி மூப்பு பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

News December 10, 2025

புதுவை: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

புதுவையில் ஓடும் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் நகையை பறித்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையம் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அந்த பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

error: Content is protected !!