News September 3, 2025
புதுவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் சாவு

புதுவை பூமியான்பேட், புது தெரு சதீஷ், தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை கடந்த 30ம் தேதி இறந்தார். அதிலிருந்து மனமுடைந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
புதுவை: மாணவர்களுக்கு நிதி உதவி அரசாணை வெளியீடு

புதுச்சேரி, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுமார் ₹ 27.84 கோடி நிதியுதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10% அரசு இட ஒதுக்கீட்டில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், இந்த நிதியுதவி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
News November 12, 2025
புதுச்சேரி: முதலாம் உலகப் போரின் நினைவு தினம்!

முதலாம் உலக போரின் 109ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (12.11.2025) காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நினைவு தூண் முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் தியரி மாத்தூ, புதுவைக்கான துணை தூதர் எட்டியென் ரோலண்ட் பியக், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் தூதரக அதிகாரிகள், பிரஞ்சு குடியிரிமை மக்கள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.


