News August 19, 2024
புதுவையில் இளைஞருக்கு கத்திக்குத்து

புதுவை கரிக்கலாம்பாக்கம் சரவணன், இவர் நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தனது நண்பர் செல்வத்துடன் நேற்று அதிகாலை தளத்து மேடு புதிய பைபாஸ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த 7 பேர் கொண்ட கும்பல் சரவணனை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
புதுவை: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

புதுவை மாநிலம் திருபுவனையில் அமைந்துள்ள கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் முலவரான வரதராஜபெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்
News January 22, 2026
புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு புதிய பொறுப்பு

புதுச்சேரி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் கந்தசாமி, தற்போது கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, பணிகளை விரைவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் இந்த அதிரடி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் கந்தசாமி இனி மாநில தேர்தல் துறையில், துணை தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவார்.
News January 22, 2026
புதுச்சேரி முதல்வரை கடற்படை தளபதி சந்திப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், இன்று (22.01.2026) முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இந்திய கடற்படையில் அக்னி வீரர்கள் மற்றும் அதிகாரிகளாக சேர ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து தளபதி அவர்கள் விளக்கமளித்தார்.


