News April 5, 2024
புதுவைக்கு தமிழக முதல்வர் வருகை

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு “போதைப்பொருள் இல்லா புதுவையை” உருவாக்கவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

புதுவை: விவாகரத்து கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

புதுவை, மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). அவரது மனைவி கிரிஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திகேயன் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்தார். இதனால் கிரிஜா, கார்த்திகேயனுக்கு போன் செய்து திட்டி தன்னுடன் வாழவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.