News January 12, 2026
புதுச்சேரி: 2000ஆம் ஆண்டு பழமையான கோயில்!

காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்.!
Similar News
News February 10, 2026
புதுச்சேரி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 10, 2026
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

புதுச்சேரி தொழிலாளர் நலத் துறையின் சமூகப் பாதுகாப்பு வாரிய தொழிலாளர் அதிகாரி வெளியிட்ட செய்தியில், “அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை எல்ஐசி மூலம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. பொது சேவை மையத்தைப் பயன்படுத்தி இதில் சேரலாம்.” என கூறியுள்ளார்.
News February 10, 2026
அதிக வருகைப் பதிவு வைத்துள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 97 சதவீதத்திற்கும் மேல் வருகைப் பதிவு பெற்றிருக்கும் மாணவர்கள் அரசின் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.1.92 லட்சம் நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 957 மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.


