News June 18, 2024
புதுச்சேரி: வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்

புதுவை ஆளுநர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை திட்டக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளேன். முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். வரும் பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News January 15, 2026
புதுச்சேரி: பூண்டு வெடி சம்பவத்தில் 2 பேர் கைது

வில்லியனூரைச் சேர்ந்த பாண்டியன் தன் மாமியார் ஜெரீனா உடன் காட்டுப்பன்றி வேட்டையாடியதில் பூண்டு பட்டாசு பயன்படுத்தினர். மீதமுள்ள பட்டாசுகளை ஸ்கூட்டரில் வில்லியனூருக்கு கொண்டு செல்லும்போது கூடப்பாக்கம் அருகே வெடித்ததில், ஜெரீனா உடல் சிதறி பலியானார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்ததாக ஜெரீனாவின் மகன் விஜய், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
News January 15, 2026
புதுச்சேரி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 15, 2026
புதுச்சேரி: இறைச்சி கடைக்கு தடை

புதுச்சேரி அரசு ஆணைப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


