News September 29, 2025

புதுச்சேரி: ரயில்வே சுகாதார மையத்தில் திருட்டு

image

புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாணரப்பேட்டையில் ரயில்வே சுகாதார மையம் உள்ளது. இங்கு இருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டரை மர்ம நபர் திருடிச்சென்றதாக ரயில்வே சுகாதார மையத்தின் தலைமை சுகாதார ஆய்வாளர் கைலாஷ் சந்த் மீனா, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

புதுவை: வாலிபர் கொலையில் 9 பேர் கைது

image

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் மகன் சந்தோஷ், ரெயின்போ நகர் பகுதியில் சாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், டிவி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் நடந்த தகராறில் சந்தோஷ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரிய கடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நேற்று 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 15, 2025

புதுச்சேரி: குறை தீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.15) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

காரைக்காலில் மின் கட்டணம் வசூல் மையம் இயங்கும்

image

மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு நாளை (15.11.2025) சனிக்கிழமை காரைக்கால் டவுன், தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, அம்பகரத்தூர், திருநள்ளார், நிரவி மற்றும் திருமலைராயன்பட்டினம் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்படுகிறது. மின் கட்டண பாக்கியனை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!