News April 23, 2025
புதுச்சேரி பால்பவன் பயிற்றுநர்கள் 56 பேர் இடமாற்றம்

புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், மாநிலம் முழுவதும் ஜவகர் சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஜவஹர் சிறுவர் இல்லங்களில் பணிபுரியும் 56 பயிற்றுநர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.
News November 12, 2025
புதுச்சேரி: கார் மோதி தொழிலாளி படுகாயம்

காரைக்கால் அகலங்கன்னு கிராமம் சிவக்குமார், இவர் விவசாய தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டிபன் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் விழிதியூர் சென்றார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 12, 2025
புதுச்சேரி: நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி கட்டிட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2024-25ம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவி மற்றும் பண பயன் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களுடன் அந்தந்த பிராந்திய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


