News October 13, 2025

புதுச்சேரி: குடிநீர் வினியோகம் நிறுத்தம்!

image

புதுச்சேரி, தியாகு முதலியார் நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நாளை (14.10.2025) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் அன்று பகல் 12 மணி முதல் 2 மணி வரை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலூர் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திராநகர், அனிதா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என பொதுபணித்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News December 14, 2025

புதுவை: மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை

image

புதுவை முருங்கம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (61). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நோய் கொடுமையால் தண்டபாணி கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எலி பேஸ்ட்டை உட்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

image

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!