News October 19, 2025
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி உழவர்களை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், உழவர்கரை நகராட்சி பகுதிகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளது. சாலையோரம் கடை அமைத்து, பொதுமக்கள் பார்வையில் படுமாறு, ஆடு மற்றும் கோழிகளை அறுத்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
Similar News
News December 17, 2025
புதுவை: மது போதையில் கூலித்தொழிலாளி பலி

முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிபாலன் (55). இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கல்மண்டபம் மதுபான கடை அருகே மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
புதுவை: இன்று இங்கெல்லாம் மின்தடை

காரைக்கால் மின்னழுத்த பாதையில் இன்று (டிச.17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.17) காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பை பாஸ் சாலை, மாஸ் நகர், டி.கே. நகர், ஆடிட்டர் சாகுல் ஹமீத் நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.