News October 19, 2025

புதுச்சேரி ஆளுநர் தீபாவளி வாழ்த்து

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை, சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.

Similar News

News December 7, 2025

புதுச்சேரி: ‘முப்பரிமாணங்கள்’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்

image

புதுச்சேரி செட்டி வீதியில், தனியார் உணவகத்தில் “முப்பரிமாணங்கள்” ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இந்நிகழ்வினை தொழிலதிபர் ராமச்சந்திரன், அடி சல்பே நிர்வாகி சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும் கலைமாமணிகள் ஓவியர் சுகுமாரன், கந்தப்பன் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வு டிச.6-27 வரை இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் இருக்கும் என்று தனியார் உணவாக சார்பில் தெரிவித்தனர்.

News December 7, 2025

புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி அறிவிப்பு

image

புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத் தலைவர் பேராசிரியா் ராமலிங்கம், புத்தக கண்காட்சி தேதிகளை அறிவித்தார். மேலும் “29-ஆவது தேசிய புத்தக கண்காட்சி டிச.19-28 ஆகிய தேதிகளில், தனியார் மண்டபத்தில் நடைபெறும். இதில் சுமாா் 60,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில், புத்தகங்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

News December 6, 2025

புதுச்சேரி: தவெக பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு அனுமதி

image

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!