News November 30, 2024
புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கிய ‘ஃபெஞ்சல்’ புயல்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் இன்று (நவ.30) மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து 50 கீ.மி தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் மரக்காணம் அருகே முழுமையாக கரையை கடக்கும் என்றும், இதனால் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
புதுவையில் 2 ஜவுளி கடையில் ரூ. 32 ஆயிரம் திருட்டு

புதுவை, சாரம், லட்சுமணன், இவர் நேரு வீதியில் 2 ஜவுளி கடைகளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 162ம் எண் கடையை திறந்து உள்ளே சென்றபோது, கடையின் மேல்தள பால் சீலிங் உடைத்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 8 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது மற்றொரு 168 கடையில் 24,000 பணம் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
News November 8, 2025
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

புதுவை, காலாப்பட்டு போலீசார் தகவலின் பேரில் சில கடைகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது புதுவை பல்கலைகழகம் பகுதியில் 4 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற காலாப்பட்டு பெர்னாண்டஸ் (49), கனகசெட்டிகுளம் சக்திவேல் (47), விக்னேஸ்வரன் (30), பாபு (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் ரூ.9,655 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 7, 2025
புதுச்சேரி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


