News April 3, 2025

புதுச்சேரி அரசு தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணிகளை நிரப்புவதற்காக வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றது. செய்முறை தேர்விற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 23, 2026

புதுவை: ஆபாசமாக பேசிய இருவர் கைது

image

அபிஷேகப்பாக்கம் தெப்பக்குளம் சிவன் கோயில் அருகில், 2 பேர் மது போதையில், நின்று ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்துள்ளது. அதையடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரை பிடித்து, விசாரித்தனர். அப்போது அவர்கள் சிங்கிரிகுடியைச் சேர்ந்த செந்தாமரை செல்வன், பெரியக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திருமாறன் என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

News January 23, 2026

புதுச்சேரி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ சேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக்<<>> செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்க்ளுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்

News January 23, 2026

புதுவை: மூச்சு திணறி பெண் ஒருவர் பலி

image

மடுகரையைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (35). இவர், கடந்த ஒரு வருடமாக நரம்பியல் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு மூச்சுவிட சிரமமாக உள்ளது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவரை, புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து மடுகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!