News August 20, 2024

புதுச்சேரி அரசு உறுதி மொழி ஏற்பு

image

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தொடர்ந்து சர்வமத பிராத்தனையுடன் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. பின்னர் சத்பவனா திவாஸ் உறுதி மொழியை முதலமைச்சர் ரங்கசாமி வாசிக்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அரசு செயலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Similar News

News January 25, 2026

JUST NOW: புதுச்சேரியை சேர்ந்தவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது

image

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், 2026-ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய தற்காப்புக் கலை ஜாம்பவான் பூரணங்குப்பம் பழனிவேலுக்கு, கலைத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்படுவதாக, மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

News January 25, 2026

புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

News January 25, 2026

புதுச்சேரி: ஆன்லைன் மோசடி – மார்பிங் செய்து மிரட்டல்

image

வில்லியனூரைச் சேர்ந்த ஒருவர் கடன் செயலியில் ரூ.4.61 லட்சம் பெற்று, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளார். அதன் பிறகும், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!