News March 21, 2024
புதுச்சேரி : அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதி

புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் புதுவை சட்டப்பேரவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரவைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 6, 2026
புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்

திருநள்ளாறில் இன்று நடைபெறும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம், திருநள்ளாறு, நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் என்றும் மதியம் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
News March 5, 2026
புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கும் விழா

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலைரங்கத்தில், இன்று புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினர்.
News March 5, 2026
BREAKING காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை பள்ளிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


