News April 2, 2025
புதுச்சேரியை சேர்ந்தவர் கடலூரில் என்கவுண்டர்

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
Similar News
News January 21, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 21, 2026
புதுவை: போக்ஸோ வழக்கில் வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆடியபாதம் (39). இவர் 2013-ம் ஆண்டு போக்ஸோ (POCSO) வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து, தற்போது தலைமறைவாக உள்ளார். அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வீட்டில் இல்லாததால், வரும் 23-ம் தேதி காலை 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News January 21, 2026
புதுவை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


