News October 9, 2025
புதுச்சேரியில் 13 போலீசார் இடமாற்றம்

புதுச்சேரி காவல்துறையில் அவ்வப்போது போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பல்வேறு காவல் நிலையங்களில்
பணியாற்றி வரும் 10 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 1 ஏட்டு மற்றும் 2 போலீஸ்காரர்கள் என 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுவை காவல்துறை
தலைமையக போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

புதுவை, காலாப்பட்டு போலீசார் தகவலின் பேரில் சில கடைகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது புதுவை பல்கலைகழகம் பகுதியில் 4 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற காலாப்பட்டு பெர்னாண்டஸ் (49), கனகசெட்டிகுளம் சக்திவேல் (47), விக்னேஸ்வரன் (30), பாபு (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் ரூ.9,655 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 7, 2025
புதுச்சேரி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.8) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


