News August 4, 2024
புதுச்சேரியில் முதல் முறையாக PPL T20 கிரிக்கெட் போட்டி

புதுச்சேரியில் முதல் முறையாக PPL T20 கிரிக்கெட் போட்டி, நாளை தொடங்க உள்ள நிலையில், வில்லியனூர் மோகித் அணிக்கான சீருடை மற்றும் அணிக்கான பாடல்கள் என்று தனியார் உணவகத்தில் அறிமுக விழா நடைபெற்றது. தொடர்ந்து, வில்லியனூர் மோகித் அணி சார்பில் வீரர்களுக்கான சீருடைகளை சட்டமன்ற உறுப்பினர் வி.பி. ராமலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார்.
Similar News
News January 17, 2026
புதுச்சேரி கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் அறிவிப்பு

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (ஜன.17) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில் மெல்லிசை இசை, பறையாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், மல்லர் கம்பம், வாத்திய இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
புதுச்சேரியில் விடுமுறை அறிவிப்பு!

சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், இன்று (ஜன.17) 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி வங்கி ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள வங்கிகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
புதுவையில் ஆண்களுக்கான பொங்கல் விழா!

புதுவை மாநிலம் வானூர் அருகே அமைந்துள்ள வீரனார் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்து குளக்கரையில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கலை படையலிட்டு ஆண்கள் மட்டுமே உண்டனர். இப்பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.


