News August 20, 2024
புதுச்சேரியில் சர்வதேச காற்றாடி திருவிழா

புதுச்சேரியில் உள்ள அழகிய கடற்கரையில் ஒன்று வீராம்பட்டினம் ஈடன் பீச். பளபளக்கும் வெள்ளை மணலுடன், சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்ட ஈடன் கடற்கரை, புதுச்சேரியில் நீல நிறக் கொடி சான்றளிக்கப்பட்ட பெருமைமிக்க கடற்கரையாகும் இந்த ஈடன் பீச்சில் வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் சர்வதேச காற்றாடி விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை வரை இந்த காற்றாடி திருவிழா நடக்கிறது.
Similar News
News January 17, 2026
புதுச்சேரியில் விடுமுறை அறிவிப்பு!

சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், இன்று (ஜன.17) 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி வங்கி ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள வங்கிகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
புதுவையில் ஆண்களுக்கான பொங்கல் விழா!

புதுவை மாநிலம் வானூர் அருகே அமைந்துள்ள வீரனார் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்து குளக்கரையில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கலை படையலிட்டு ஆண்கள் மட்டுமே உண்டனர். இப்பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
News January 16, 2026
புதுச்சேரி: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.


