News May 3, 2024

புதுச்சேரியின் உள்ள ஸ்ரீ ஆரபிந்தோ ஆசிரமம்

image

ஸ்ரீ அரபிந்தோ அசிரமம் ஒரு ஆன்மீக மையமாகும். அரசியல், பத்திரிக்கையாளராக இருந்த அரவிந்தர் 1920 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு வந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1926 ஆல் அவரின் ஆசிரமம் உருவாக்கப்பட்டு, 1934 இல் பெரிதாக வளர்ச்சியைக் கண்டது. இந்த ஆசிரமத்தில் 400 க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். தற்போது சுற்றுலா பயணிகளும் ஆன்மீகவாதிகளும் இவ்விடத்திற்கு வந்து செல்கின்றனர்.

Similar News

News November 13, 2025

காரைக்கால்: நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு

image

காரைக்கால் ராயன்பாளையத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் உண்டு உறைவிடப் பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 2026-2027ம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு நாளை (13.11.2025) திருபட்டினம் அரசு நடுநிலை பள்ளியில் காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பள்ளிகளின் விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

புதுச்சேரி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

image

புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தியில், மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து மின்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு 1800 425 1912 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தனர்.

News November 12, 2025

புதுவை: மாணவர்களுக்கு நிதி உதவி அரசாணை வெளியீடு

image

புதுச்சேரி, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுமார் ₹ 27.84 கோடி நிதியுதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10% அரசு இட ஒதுக்கீட்டில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், இந்த நிதியுதவி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

error: Content is protected !!