News October 20, 2025
புதுச்சத்திரம்: கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து!

புதுச்சத்திரம் மேம்பாலத்தில் கண்டைனர் லாரியின் இடது பின் பக்க டயர் பஞ்சர் காரணமாக டிரைவர் வேறு டயரை மாற்றி கொண்டிருக்கும் போது, திண்டுக்கல் நோக்கி 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News December 12, 2025
நாமக்கல் : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

நாமக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 12, 2025
நாமக்கல்: வாக்காளர்களே! SIR UPDATE

நாமக்கல் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிப்பாளையம் அருகே வசந்த நகரை சேர்ந்த குமரன் 40, ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கதிர், 20, என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி குமரன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு புதுச்சேரி சென்று விட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் வைத்திருந்த, ரூ.2.21 லட்சத்தை திருடியதாக விசாரணையின் அடிப்படையில் கதிரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


