News April 13, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை

image

புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

புதுகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 12, 2025

புதுகை: சட்டவிரோத மது விற்பனை-ஒருவர் கைது!

image

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே, ராஜமாணிக்கம் (75) என்பவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காரையூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

News November 12, 2025

புதுகை: சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புன்னியவயல் கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏசி வாகனம் மோதியதில் மூரியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி குமார் மற்றும் அவரது மனைவி பழனிமுத்து ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!