News August 6, 2024

புதுக்கோட்டை அமைச்சர் அறிவிப்பு

image

கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையிலும், தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறந்தாங்கி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருக்கின்ற கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது என அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

புதுக்கோட்டை: பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

திருச்சி, எடத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45). இவர் சொந்த வேலை காரணமாக கீரனூர் வந்து மீண்டும் திருச்சி சென்று கொண்டிருந்த போது நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ராம் சரண் (40) என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே இருந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரின் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 25, 2026

புதுக்கோட்டை: தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அடுத்த விசூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (ஜன.24) அடையாளம் தெரியாத நபர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 24, 2026

புதுக்கோட்டை: கடன் பிரச்சனையை நீக்கும் சாந்தநாதர்

image

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியபலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க !

error: Content is protected !!