News August 5, 2024
புதுக்கோட்டையில் இன்றே கடைசி நாள்

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 நாட்களாக புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மாலை இறுதி நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா கலந்துகொள்கிறார். இன்றுடன் புத்தகத் திருவிழா நிறைவு பெறுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவில் சிறப்பிக்கின்றனர்.
Similar News
News January 22, 2026
புதுக்கோட்டை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
புதுக்கோட்டை: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.
News January 22, 2026
புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி – 2 பேர் கைது

நாகுடி பகுதியில் ஜபருதீன்(44), என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பதுக்குவதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைந்த்தது. அதன் பேரில் அங்கு சோதனை செய்தபோது, 75 போதைப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் அறந்தாங்கி கட்டுமாவடி டீக்கடையில் 105 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. பின் உரிமையாளர் செல்வமணி 66, அருண்குமார் 33, கைது செய்து, ஜாமினில் விடுதலை செய்தனர்.


