News November 25, 2025
புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்காக நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 வயதில் நிரம்பி 10ம் வகுப்பு முடித்தவர்கள், Ex ராணுவத்தினர் Ex அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.3 முதல் 5ம் தேதி வரை நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04322-221220 தொடர்பு கொள்ள அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
புதுக்கோட்டை: மணல் கடத்தியவர் தப்பி ஓட்டம் – போலீசார் தேடல்

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை வெள்ளத்தூர் பாலம் அருகே நேற்று அடையாளம் தெரியாத நபர் ட்ரக் வாகனத்தில் மணல் கடத்திக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வல்லத்ராக்கோட்டை காவல் துறையினரை கண்டவுடன், வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையெடுத்து 1/2 யூனிட் மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
News January 22, 2026
புதுக்கோட்டை: டாஸ்மாக் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஜன.26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் உள்பட அனைத்து மதுப்பான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று மது விற்பனை நடைபெறாது. அதேபோல் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


