News April 5, 2024

புதுகை: மீன்பிடி திருவிழா

image

புதுகை அருகே குளத்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிறுமாக்கண்மாயில் பாரம்பரிய‌ மீன்பிடி உபகரணமான ஊத்தா மூலம் மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில்,மீன்பிடி ஆர்வலர்கள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கத் தொடங்கி ஊத்தாவை வைத்து நாட்டு வகை மீன்களான கட்லா,ரோகு,சிசி,பாப்லட்,கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை லாபகமாக பிடித்து சென்றனர்.

Similar News

News March 12, 2026

புதுக்கோட்டை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

புதுக்கோட்டை: அம்பேத்கர் சிலைக்கு தலைப்பாகை – பரபரப்பு

image

புதுகை பழைய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சிலைக்கு நேற்று மர்ம நபர்கள் தலைப்பாகை கட்டி சென்றனர். அம்பேத்கர் சிலையை சுற்றி கூண்டுகள் அமைத்து பூட்டப்பட்டுள்ளதையும் மீறி தலைப்பாகை கட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாலை போலீசார் விரைந்து வந்து அந்த தலைப்பாகை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர காவல் துறையினர் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

News March 12, 2026

புதுக்கோட்டை: திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிடுள்ளார். அதில், 2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் பொதுப்பணி பிரிவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு வருகிற ஏப்.1ஆம் தேதிக்குள்<> www.joinindianarmy.nic.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!