News September 30, 2025

புதுகை மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News December 17, 2025

புதுகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

image

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இச்சடி சாலையில் நேற்று அசோக்குமார் (49) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2025

புதுகை: தெருநாய்களால் பலியான 20 ஆடுகள்!

image

கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் செம்மறி ஆடுகளை வளர்ந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு கொட்டகைக்கு சென்றபோது அங்கு 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 20 ஆடுகளும் பலியாகின.

error: Content is protected !!