News November 25, 2025
புதுகை: மழையால் இடிந்து விழுந்த 6 வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அவ்வகையில், கறம்பகுடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெய்த மழையால் வெள்ளம் சூழந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கால்வாய் தண்ணீர் முழுகடித்து, ஊருக்குள் நீர் புகுந்தது. இதில், சக்திவேல் என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் அதே பகுதியில் 5 வீடுகளின் சுவருகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டன.
Similar News
News January 20, 2026
புதுக்கோட்டை: வேலை வாய்ப்பு முகாம்!

புதுகை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தனியார் துறையில் பணி அமர்த்தும் நோக்கில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 18 முதல் 35 வயது உள்ளோர் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 20, 2026
புதுகை: அரசு சுகாதார துறையில் வேலை

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 20, 2026
புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமாக 22.01.26 ஆம் தேதி முதல் 08.02.26 வரை ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் “நம்ம ஆட்டம்” 2026 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியை சிறப்பாக புதுகை மாவட்டத்தில் அரசு அலுவலர்களும் அனைவரும் உடனிருந்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.


