News October 19, 2025

புதுகை: பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

image

புதுகையிலிருந்து பெருங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் அடையாளம் வாலிபர் ஒருவர் திடீரென விழுந்ததில் அவரது உடல் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கணேஷ்நகர் போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 10, 2025

புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

image

புதுக்கோட்டையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

புதுக்கோட்டை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!

News December 10, 2025

புதுக்கோட்டை: கடலில் விழுந்த மீனவர் மாயம் – சோகம்

image

புதுகை மாவட்டம் பத்தக்காடு பகுதி சேர்ந்த சேவியர்(45) மற்றும் பாஸ்கர்(46) இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது 4 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிந்த போது படகு பழுதானது. அதனை சரி செய்த போது 2 பேரும் கடலில் விழுந்தனர். இதில் பாஸ்கர் சக மீனவர்களால் மீட்கப்பட்டார். மாயமான சேவியரை கடலோர காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

error: Content is protected !!