News April 11, 2024
புதுகை: இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
புதுகை: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <
News November 16, 2025
புதுகை: ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற அழைப்பு!

புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின எழுத்தாளர்களை மேம்படுத்தும் வகையில், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப்பெற விரும்புவோர் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
புதுகை: முதல்வரை சந்தித்த ஒன்றிய செயலாளர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உடன்பிறப்பே வா என்ற நிகழ்வின் மூலம் திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் உடன் பிறப்பே வா என்ற நிகழ்வில் கலந்து கொண்டு, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அவருடைய தொகுதி பற்றி கலந்துரையாடினார்.


