News March 29, 2024
புதுகை அருகே தேர்தல் புறக்கணிப்பு

காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இன்று நோட்டீஸ் வெளியிடபட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருமயம் அருகே உள்ள வெங்களூர் சாலையில் நேற்று பைக்கில் பன்னீர்செல்வம் (63), சாந்தி (55) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
புதுக்கோட்டையில் நாளை தொடங்குகிறது!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் ஜன.28-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு அபிஷேகமும், மாலை 4 மணிக்கு கடஸ்தாபனமும், மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
News January 24, 2026
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.


