News June 18, 2024

புதிய வீடு கட்டியவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

கடலூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1.10.2023 முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மனை வரன்முறை அனுமதி மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் மட்டுமே பெற வேண்டும்.நேரடி அனுமதி பெற்றிருந்தால் செல்லாது.மேலும் நேரடியாக அனுமதி பெற்றிருப்பின் அவற்றை தற்போது, முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

Similar News

News January 20, 2026

கடலூர்: உடல் கருகி மூதாட்டி உயிரிழப்பு

image

பண்ருட்டி அருகே சிறுத்தொண்டமாதேவியை சேர்ந்தவர் தனபால் மனைவி அஞ்சலை (75). இவர் வீட்டின் அருகே குளிருக்கு இதமாக தீமூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் சேலையில் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 20, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – வாலிபருக்கு வலை வீச்சு

image

கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவர்களின் அளித்த தகவலால், பண்ருட்டி மகளிர் போலீசார், தினேஷ் குமார் மீது நேற்று(ஜன.19) போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

News January 20, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!