News August 5, 2024
புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திரு சி.வீ.மெய்யநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் மற்றும் பன்னீர்செல்வம் , நகர மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News January 18, 2026
மயிலாடுதுறையில் அதிரடி காட்டிய போலீசார்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சட்டவிரோத மதுபான கடத்தல் மற்றும் விற்பனை குறித்து, மாவட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த மயிலாடுதுறை தெற்கு குமர கட்டளை தெருவை சேர்ந்த செந்தில் (52) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 810 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News January 18, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில், திருக்குறள் வார விழாவை முன்னிட்டு நாளை (ஜன.19) காலை 10:30 மணி அளவில், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் குறல் ஒப்புவித்தல், குறல் சார்ந்த ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்களது ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலை சரி பார்ப்பிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 முதல் இன்று (ஜன.18) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


