News August 22, 2024
புதிய தலைமைச் செயலாளரை நேரில் வாழ்த்திய விசிக தலைவர்

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக அண்மையில் பதவி உயர்வுப் பெற்ற முருகானந்தம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையே சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். “தனது நேர்மையான பெரும் உழைப்பால் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த தலைமை பீடத்தை எட்டியுள்ள பேராளுமை முருகானந்தம் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
சென்னை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
சென்னையில் சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

சென்னை போரூர் அருகே ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் பகுதியில், நேற்று பாலசுப்பிரமணியின் 8 வயது மகன், தனது அக்காவுடன் டியூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய் அவரை தாக்கியது. இதனால் சிறுவனுக்கு முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமேற்பட்டது. அருகிலிருந்தவர்கள் மீட்டு, அவரை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
News December 7, 2025
சென்னை விமான நிலையத்தில் 96 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் இரவு 11.50 மணி வரை 44 வருகை, 52 புறப்பாடு என மொத்தம் 96 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்டிகோ விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், நாளை 7ம் தேதி பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படும் எனவும், 10ம் தேதி வரை இதே நிலைமை நீடிக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.


