News April 10, 2024

புதிதாக வருகிறது 112 மருத்துவ கல்லூரிகள்

image

நாடு முழுவதும் புதிதாக 112 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை உயர்த்த வசதியாக, கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, 112 மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சம், உ.பி.யில் 112 கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

₹1,000 பணம் வரவில்லையா? இதை செய்யுங்க!

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்த <<18541396>>17 லட்சம் மகளிருக்கு ₹1,000 வரவு<<>> வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தில் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், பணம் கிடைக்காத 11 லட்சம் பேர் உள்ளிட்ட பலரும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பணம் வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

News December 12, 2025

Pregnancy Test: ஹாஸ்டலில் மாணவிகளுக்கு கொடுமை!

image

புனே பழங்குடியினர் விடுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிரவைத்துள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள், லீவு முடிந்து வந்தால், கர்ப்ப பரிசோதனை செய்ய விடுதி நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர். பரிசோதனையை செய்ய மறுத்தால், விடுதிக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறும் நிலையில், தற்போதும் இந்நிலை தொடர்வதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

News December 12, 2025

திருப்பரங்குன்றத்தால் திருப்பம் வரும்: நயினார்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கிக்காகவே கோர்ட் தீர்ப்பை திமுக மதிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கருத்து கணிப்புகளில் கூட திமுக ஆட்சி மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால், இந்த ஆட்சிக்கே திருப்பம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!