News October 10, 2024

புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 180020211989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

பாப்பான்குளம் பகுதியில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பாப்பான்குளம் அருகே உள்ள சங்கரநாராயணர் சுவாமி கோவில் அருகே (நவம்பர் 12) இன்று சுமார் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளம் பாம்பை பிடித்து வனத்துறையிடம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

News November 12, 2025

தென்காசி: ஆசிரியர் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

பாவூர்சத்திரத்தில் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிராந்தியில் விஷம் கலந்து கொலை செய்து, தனது வீட்டில் புதைத்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த பொன் செல்வி, அவரது தந்தை தங்கப்பாண்டி தம்பி முருகன் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனையும், தடயத்தை மறைத்ததற்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதம் விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

News November 12, 2025

தென்காசி: நாளை சட்டப்பேரவை பொதுக்குழு வருகை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் 2024-2026ம் ஆண்டுக்கான  பொதுக் கணக்குக்  குழு தலைவர் செல்வப்பெருந்தகை  தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற  பேரவை  பொதுக் கணக்குக்  குழு உறுப்பினர்கள் 13.11.2025 அன்று  தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ள  உள்ளனர். மேலும், அன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் குழு மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடக்கிறது.

error: Content is protected !!